தமிழ்நாடு

தூத்துக்குடி துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

3rd Dec 2021 08:56 AM

ADVERTISEMENT


தூத்துக்குடி: அந்தமான் அருகே நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியது. மேலும் இது புயலாக வலுவடைந்துள்ளதன் காரணமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அந்தமான் அருகே நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியது. மேலும் இது புயலாக வலுவடைந்து மத்திய வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் நிலைகொண்டு, ஆந்திரா - ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | ஒமைக்ரான் பரவிய நாட்டிலிருந்து திருச்சி வந்தவருக்கு கரோனா

இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வரும் கப்பல்கள் மற்றும் தூத்துக்குடி மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், வெள்ளிக்கிழமை  ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

ADVERTISEMENT

Tags : Thoothukudi Port 1st Storm Warning
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT