தமிழ்நாடு

திருச்சியில் குடியிருப்பு பகுதியில் மழைநீர்: பொதுமக்கள் சாலை மறியல்

3rd Dec 2021 11:14 AM

ADVERTISEMENT


திருச்சி: திருச்சியில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஷ்வரா நகர் பகுதியில் பெரியகுளத்தில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அன்றாட அத்தியாவசிய பொருள்கள் வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர்,  திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க | வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்க மேலும் 3 மாதங்கள் அவகாசம்

போராட்டத்தில் வீடுகளை சுற்றி தேங்கியுள்ள மழைநீர் மற்றும் சாக்கடை நீரை அகற்றிவிட்டு, சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி ஒரு மணி நேரத்திற்கு மேலாக மறியல் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதனைத்தொடர்ந்து திருச்சி-புதுக்கோட்டை சாலையில் செல்லும் போக்குவரத்து வாகனங்கள் குதிரைப்பந்தய சாலை வழியாக புதுக்கோட்டை செல்லும் வழித்தடங்களில் மாற்றி விடப்பட்டது.

இதையும் படிக்க | ரூ.58 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். 

Tags : Rainwater residential area Trichy oad blockade சாலை மறியலில்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT