ஒமைக்ரான் கரோனா வகை அச்சுறுத்தல் நிலவி வரும் சூழலில் பள்ளிகளில் கூடுதல் கட்டுபாடுகளை விதித்து பள்ளிக் கல்வித்துறை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தென் ஆப்பிரிகாவில் உருவான ஒமைக்ரான் வகை கரோனா பல்வேறு நாடுகளில் பரவி வருகின்றன. இந்தியாவிலும் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பில்,
- ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும்.
- வகுப்புகளை நேரடியாகவோ, இணையவழியாகவோ நடத்திக் கொள்ளலாம்.
- இறைவணக்கக் கூட்டம், விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும்.
- என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ். சேவைகளை அனுமதிக்கக் கூடாது.
மேலும், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ADVERTISEMENT