தமிழ்நாடு

ராமேஸ்வரம் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்

3rd Dec 2021 03:06 PM

ADVERTISEMENT


ராமேசுவரம்: தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகவிருக்கும் ‘ஜாவத்’ புயல் காரணமாக பாம்பன் பகுதி மீனவர்களுக்கு தொலை தூர எச்சரிக்கை விடுக்கும் விதமாக துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் தங்களது படகுகளை கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.

தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வழுவடைந்து ‘ஜவாத்’புயலாக மாற உள்ளது.

இதனைத்தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதியில் இருந்து அரபி கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு தொலைதூர எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

இதனால் அரபிப் கடல் பகுதியில் மின்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் அந்தந்த துறைமுகத்தில் விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
 

Tags : ராமேஸ்வரம் jawad
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT