தமிழ்நாடு

தமிழகத்தில் ஒமைக்ரான் இன்னும் உறுதியாகவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

3rd Dec 2021 09:35 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் இன்னும் ஒமைக்ரான் கரோனா வகை உறுதியாகவில்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

சென்னை, திருச்சியில் ஒமைக்ரான் கரோனா வகை கண்டறியப்பட்டதாக இன்று காலை முதல் சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகின்றன.

இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

தமிழகத்திற்குள் ஒமைக்ரான் கரோனா வகை இன்னும் கண்டறியப்படவில்லை. சென்னை, திருச்சியில் ஒமைக்ரான் உறுதியாகியுள்ளதாக தவறான தகவல் பரவி வருகிறது.

ADVERTISEMENT

திருச்சி விமான நிலையத்தில் கரோனா உறுதியான நபரின் மாதிரியை மரபணு பரிசோதனைக்காக பெங்களூரு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே எந்த வகை கரோனா எனத் தெரியவரும்.

மேலும், அனைத்து விமான பயணிகளுக்கும் கரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பரிசோதனை கட்டணம் செலுத்த முடியாத பயணிகளுக்கு அரசே செலுத்தும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT