தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,500 கனஅடியாக அதிகரிப்பு

3rd Dec 2021 08:47 AM

ADVERTISEMENT


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,500 கன அடியாக அதிகரித்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 9,500 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பகல் 12.00 மணிக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,500 கனஅடியாகவும், இரவு 8 மணிக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,500 கனஅடியாகவும் அதிகரித்தது.

இதையும் படிக்க | சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு கரோனா

இன்று வியாழக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையிலிருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 13,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT