சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. கடந்த மாதம் பெய்த மழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியது.
இந்நிலையில், சென்னையில் வெள்ள நீர் தேங்குவதை தடுப்பது குறித்து ஒய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
மழைநீர் தேக்கத்தை தடுப்பதற்காக திருப்புகழ் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் ஏற்கனவே 12 பேர் உள்ள நிலையில், கூடுதலாக 6 பேர் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT