தமிழ்நாடு

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்குத் தடை விதிக்க மறுப்பு 

3rd Dec 2021 04:12 PM

ADVERTISEMENT

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வருகிற 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்குத் தடை கோரி அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு இன்று தனி நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

அதிமுகவை கேட்காமல் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது, அதேநேரத்தில் தேர்தலில் சட்ட விதிமீறல் இருந்தால் தேர்தலை நீதிமன்றம் ரத்து செய்யும் என்று நீதிபதி தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். 

முன்னதாக கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவில் இருந்து அக்கட்சியின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமியை நீக்கி ஓபிஎஸ், இபிஎஸ் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

டிச.7-இல் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளுக்குத் தோ்தல்

Tags : EPS OPS
ADVERTISEMENT
ADVERTISEMENT