தமிழ்நாடு

ஒமைக்ரான் பரவிய நாட்டிலிருந்து திருச்சி வந்தவருக்கு கரோனா

3rd Dec 2021 08:28 AM

ADVERTISEMENT

ஒமைக்ரான் பரவிய நாட்டிலிருந்து திருச்சி வந்தவருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் கூறியதாவது:

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வியாழக்கிழமை இரவு வந்த ஸ்கூட் ஏர்வேஸ் விமான பயணி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா என கண்டறிவதற்கான  மரபணு பரிசோதனைகள் நடந்துவருகிறது. சோதனை முடிவுகள் வந்த  பிறகே ஒமைக்ரான் பாதிப்பா என்பது தெரிய வரும் என  தகவல் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

தென் ஆப்பிரிக்காவிலிருந்து பெங்களூரு வந்த இருவருக்கு இந்தியாவில் முதல்முறையாக ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட நாடான சிங்கப்பூரிலிருந்து வந்தவருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : trichy singapore omicron
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT