தமிழ்நாடு

பிரிட்டனிலிருந்து சென்னை வந்த சிறுமிக்கு கரோனா

3rd Dec 2021 10:19 AM

ADVERTISEMENT

பிரிட்டனில் இருந்து சென்னை வந்த சிறுமிக்கு இன்று கரோனா உறுதியாகியுள்ளதாக தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

பிரிட்டனிலிருந்து சென்னை வந்த 10 வயது சிறுமிக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது மாதிரியை மரபணு சோதனைக்காக பெங்களூரு அனுப்பி வைத்துள்ளோம். பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே எந்த வகை கரோனா என்பது உறுதியாகும்.

அந்த சிறுமியை சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

முன்னதாக, சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மாதிரியும் மரபணு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT