தமிழ்நாடு

ஜெயில் திரைப்பட ஓடிடி உரிமை: உயர்நீதிமன்றம் உத்தரவு

3rd Dec 2021 07:10 PM

ADVERTISEMENT

'ஜெயில்' திரைப்படத்தின் ஓடிடி உரிமை குறித்து வரும் 6ம் தேதி வரை எந்த முடிவும் எடுக்கக் கூடாது என தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
ஜி.வி.பிரகாஷ், அபர்ணநிதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வசந்தபாலன் இயக்கியுள்ள 'ஜெயில்' திரைப்படத்தை க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இதையும் படிக்க- மதுரையில் தடுப்பூசி போடாதோர் பொதுஇடங்கள் செல்லத் தடை

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயில் திரைப்படத்தின் ஒடிடி உரிமை குறித்து வரும் 6 ம் தேதி வரை எந்த முடிவும் எடுக்கக்கூடாது என தயாரிப்பு நிறுவனமான கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸுக்கு நீதிபதி உத்தரவிட்டார். 
அத்துடன் இவ்விவகாரம் குறித்து வரும் திங்கள்கிழமை முடிவெடுக்கப்படும் என தெரிவித்து வழக்கு விசாரணையையும் அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்தார்.

Tags : jail movie
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT