தமிழ்நாடு

தமிழக எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்; பரிசோதனைக்குப் பின்னரே அனுமதி!

3rd Dec 2021 05:27 PM

ADVERTISEMENT

கா்நாடகத்தில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

புதிய வகை 'ஒமைக்ரான்' கரோனா தொற்று தென்னாப்பிரிக்காவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட நிலையில் தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட  நாடுகளுக்கு பரவியுள்ளது. 

தென்னாப்பிரிக்காவில் இருந்து கர்நாடகம் வந்த இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தமிழக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

ADVERTISEMENT

குறிப்பாக தமிழக- கர்நாடக எல்லைகளில் தீவிர மருத்துவக் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. முழு பரிசோதனைக்குப் பின்னர் முடிவுகள் வந்தபின்னரே எல்லைகளில் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 

தமிழகத்தின் அனைத்து எல்லைகளிலும் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. 

Tags : TN Border omicron ஒமைக்ரான்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT