தமிழ்நாடு

கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

3rd Dec 2021 04:43 PM

ADVERTISEMENT

கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வெப்பச்சலனம் காரணமாக இன்று தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

இதையும் படிக்க- மல்லவாடி அரசு மறுவாழ்வு இல்லத்துக்கு புதிய கட்டடம்: ஸ்டாலின் திறந்து வைத்தார்

தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸையொட்டி இருக்கும்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் ஆயிக்குடியில் 8, நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி, விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரியில் தலா 7 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tags : Tamilnadu weather
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT