தமிழ்நாடு

கோவில்பட்டியில் மறியலில் ஈடுபட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் 73 பேர் கைது

3rd Dec 2021 11:53 AM

ADVERTISEMENT


கோவில்பட்டி: கோவில்பட்டியில் கோரிக்கையை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர்கள் 12 பெண்கள் உள்ளிட்ட 73 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி, ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும். கட்டுமானத்  தொழிலாளர்களின் நல வாரிய சட்டங்களை திருத்தி நலவாரியங்களை சீரழிக்கக்கூடாது. கட்டுமானத் தொழிலாளர்களின் பணப்பலன்களை பெறுவதற்கு தொழிலாளர்களின் பங்களிப்பை கட்டாயமாக்கப்படும் சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்களுக்கான மாத ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளியின் குழந்தைகளுக்கு 1-ஆம் வகுப்பிலிருந்து கல்வி நிதி வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய முத்தரப்பு கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் சிஐடியு சிதம்பரனார் மாவட்ட கட்டுமானத் தொழிலாளர் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

இதையும் படிக்க | விவசாய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு நடந்த போராட்டத்துக்கு கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் சொ.மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் எம்.தெய்வேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் யு.செல்வகுமார், சி.அந்தோணிச்செல்வம், சிஐடியு மாநில குழு உறுப்பினர் ஆர்.கிருஷ்ணவேணி, நகர தலைவர் என்.மாரியப்பன், ஒன்றியக்குழு உறுப்பினர் முத்துச்சாமி, ஒன்றிய செயலாளர் கணேசன், நகரக்குழு உறுப்பினர் சாமிநாதன், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, சாலை மறியலில் ஈடுபட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | போடிமெட்டு மலைச்சாலையில் மீண்டும் பாறை சரிவு: போக்குவரத்து நிறுத்தம்

தொடர்ந்து, மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி தலைமையிலான போலீஸார் மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 73 பேரை கைது செய்தனர்.

Tags : construction workers arrested Kovilpatti கட்டுமானத் தொழிலாளர்கள்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT