தமிழ்நாடு

சமநிலை வாழ்முறை சிறப்பு பயிற்சியில் 456 பெண் காவல் அதிகாரிகள் பங்கேற்பு 

3rd Dec 2021 04:52 PM

ADVERTISEMENT

 

சென்னை காவல் ஆணையாளர் துவக்கி வைத்த பெண் காவலர்களுக்கான “சமநிலை வாழ்வு முறை” சிறப்பு பயிற்சி வகுப்பில் 456 சட்டம் ஒழுங்கு பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், சென்னை பெருநகர காவல்துறையில் சட்டம், ஒழுங்கு குற்றப்பிரிவு, போக்குவரத்து, மத்திய குற்றப்பிரிவு மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் 2,663 பெண் காவலர்கள் முதல் பெண் காவல் ஆய்வாளர்கள் வரையிலும் மற்றும் 2,158 ஆயுதப்படை பெண்காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் என 4,821 பெண் காவல் ஆளிநர்களுக்கு, காவல் பணியிலும் வாழ்க்கையிலும் திறம்பட செயல்பட்டு வெற்றி பெற வாழ்க்கையிலும் வேலையிலும் சமநிலை வாழ்வு என்ற 3 நாட்கள் சிறப்பு பயிற்சி முகாமினை கடந்த 24.09.2021 அன்று துவக்கி வைத்தார்.

இப்பயிற்சி முகாம் வாரந்தோறும் வெள்ளி. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்களுக்கு ஒரு குழு (பேட்ச்) என 64 குழுக்களுக்கு என 4,821 பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டுமிடப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

மேலும் இப்பயிற்சி வகுப்பில், பெண் காவலர்கள் பணியிலும், குடும்ப வாழ்விலும் திறம்பட செயல்பட்டு வெற்றி பெறுவதற்காக தன்னம்பிக்கை, உற்சாகம், ஆரோக்கியம் மற்றும் நேர்மறை எண்ணங்களை வளர்த்தல், அமைதி, உறவுகளை எளிதாகக் கையாளுதல் பணிச் சவால்களை எதிர்கொள்ளுதல், யோகா, நேர மேலாண்மை, பெண்நலம் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பெண் காவல் ஆளிநர்களுக்கு பயிற்சி வகுப்புடன் அவர்களுக்கு கண், காது, மூக்கு, தொண்டை, இரத்த அழுத்தம், நீரிழிவு, கர்ப்பப்பை வாய் புற்றுநோய்  மற்றும் மார்பக புற்றுநோய் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது.

இது வரை நடத்தப்பட்ட 6 பேட்ச்களில் சென்னை பெருநகர காவல் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணிபுரியும் 456 பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர். பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களின் உடல் நல ஆரோக்கியமும், மனநலமும் மேம்பட்டுள்ளது. மேலும் இவர்கள் பணியிலும், குடும்பத்திலும் திறம்பட செயல்பட சமநிலை வாழ்வு முறை பயிற்சி வகுப்பு பெரிதும் உதவியுள்ளது. 

எனவே மீதமுள்ள 2,207 சட்டம் ஒழுங்கு பெண் காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் 2,158 ஆயுதப்படைபெண் காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்களுக்கு வருகின்ற வாரங்களில் தொடர்ந்து நல்ல முறையில் இந்த பயிற்சி வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 

Tags : lifestyle police chennai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT