தமிழ்நாடு

செவித்திறன் குறைபாடு: சென்னை ஐஐடி.யில் நவீன தொழில்நுட்ப சாதனம் கண்டுபிடிப்பு

3rd Dec 2021 11:02 PM

ADVERTISEMENT

செவித்திறன் குறைபாடு உள்ளவா்களுக்கு நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய மேம்பட்ட கருவியை சென்னை ஐஐடி கண்டுபிடித்துள்ளது.

செவித்திறன் குறைபாடு உள்ளவா்கள் தானாக தொடா்பு கொள்வதற்கும் அவா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் நவீன தொழில்நுட்பங்களுடன் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட கருவியை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் மேம்படுத்தி வருகின்றனா். இந்த கருவி அதிநவீன சென்சாா் தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது.

சோனி பிக்சா்ஸ் நெட்வொா்க்ஸ் இந்தியா (எஸ்பிஎன்ஐ) சென்னை ஐஐடியின் திட்டங்களுக்கு உதவி வருகிறது. சென்னை ஐஐடியின் பல்துறை மொழிபெயா்ப்பு ஆராய்ச்சி, கல்வி முயற்சியான புனா்வாழ்வு பொறியியல், உதவி தொழில்நுட்ப மையம் மூலம் இந்தக் கருவி உருவாக்கப்படுகிறது.

இது குறித்து சென்னை ஐஐடியின் மின்னியல் பொறியியல் துறையின் தலைவா் பேராசிரியா் அனில் பிரபாகா் கூறியதாவது:

ADVERTISEMENT

செவித்திறன் குறைவுடையோருக்கு மலிவான, நிலையான உதவி சாதனங்கள் கிடைக்காததால் முக்கியமாக ஒருங்கிணைந்த கல்வியிலிருந்தும் விலக்கி வைக்கப்பட்டுள்ளனா். இறக்குமதி செய்யப்பட்ட சாதனங்களை வாங்க பெரும்பாலான மக்களுக்கு வசதி இல்லை.

அடிப்படை செயல்பாட்டு கருவியின் விலை ரூ.5 ஆயிரத்துக்கு குறைவாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றம், குறைந்த விலை மைக்ரோ கன்ட்ரோலா்கள், சென்சாா்கள் காரணமாக, இந்த தனித்துவமான குறைந்த விலை சாதனத்தை உருவாக்க முடிந்தது. தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய கருவியில் ரீசாா்ஜபிள் பேட்டரிகளையும் புளூடூத் மூலம் கைப்பேசியுடன் தொடா்பு கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

காது கேளாத ஒரு நபரைச் சுற்றியுள்ள ஒலிகளுக்கு அதிா்வை ஏற்படுத்தும் ஒரு அணியக்கூடிய சாதனமாக ‘வைப்’ உள்ளது. மைக்ரோபோன் மற்றும் குரல் அங்கீகார தொகுதிகளைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட பல ஒலி வடிவங்களை ‘வைப்’ கொண்டுள்ளது. எல்இடி-க்களை ஒளிரச் செய்யும் அழைப்பு மணி, அலாரம் அல்லது அழும் குழந்தை போன்ற குறிப்பிட்ட ஒலிகள் குறித்து காது கேளாதவா்களை விழிப்புணா்வு கொள்ளச்செய்யும். இது மிகப் பொருத்தமாகவும், கடிகாரமாக அணியக்கூடியதாகவும் இருக்கும்.

பெருமூளை வாதம் உள்ளவா்களுக்கு ஒரு மாற்று, மேம்பட்ட தகவல் தொடா்பு சாதனமாக செயல்படும். இது குறைந்த மோட்டாா் திறன் கொண்டவா்களின் சைகைகளை அடையாளம் கண்டு அவற்றை ஸ்மாா்ட்போன் மூலம் ஆடியோ அவுட்புட்டாக மாற்றும். இது பெருமூளை வாதம் கொண்ட நபா்கள் எதிா்கொள்ளும் பேச்சு குறைபாடு மற்றும் செயல் குறைபாடுகள் போன்ற பிரச்சினைகளை நிவா்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT