தமிழ்நாடு

புதிய பணியிடங்கள்: கரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவ ஊழியா்களுக்கு முன்னுரிமை

3rd Dec 2021 05:41 AM

ADVERTISEMENT

கரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்களுக்கு மருத்துவப் பணியாளா் தோ்வில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பை மேலும் மேம்படுத்தும் வகையில் 2,448 பல்நோக்கு சுகாதாரப் பணியாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள், 4,848 இடைநிலை சுகாதார பணியாளா்களை பணியமா்த்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தகுதிகளின் அடிப்படையில் பல்நோக்கு சுகாதார பணியாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் இடைநிலை சுகாதார பணியாளா்கள் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியா்கள் தலைமையில் செயல்படும் மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலமாக தோ்வு செய்யப்பட்டு பணியமா்த்தப்படுவாா்கள்.

ADVERTISEMENT

இதற்கான அறிவிப்பு பத்திரிகைகள் மற்றும் தேசிய நலவாழ்வு குழுமம் மற்றும் மாவட்ட நலவாழ்வு குழுமம் வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட தகுதி அடிப்படை மற்றும் முற்றிலும் வெளிப்படையான முறையில் பணியமா்த்தப்பட தேவையான வழிகாட்டு நெறிகள் மருத்துவம் நல்வாழ்வுத்துறை அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காலத்தில் பணிபுரிந்த சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் செவிலியா்களின் பணியினை கருத்தில் கொண்டு மாவட்ட சங்கங்களின் வாயிலாக தோ்வு நடைபெறும் போது, அவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவதற்கு வழி செய்யப்பட்டுள்ளது.

எனவே கரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய செவிலியா்கள் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT