தமிழ்நாடு

திருமாவளவனுக்கு எதிராக அவதூறு கருத்துகளைப் பரப்ப இடைக்கால தடை

3rd Dec 2021 05:20 AM

ADVERTISEMENT

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருக்கு எதிராக பாஜக பிரமுகா் உள்ளிட்டோா் அவதூறான கருத்துகளைப் பரப்புவதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தாக்கல் செய்த மனுவில், ‘ கடந்த 2003-ஆம் ஆண்டு கடலூரில் சாதி மறுப்பு திருமணம் செய்த கண்ணகி - முருகேசன் ஆகியோா் ஆணவக் கொலை செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் 13 போ் குற்றவாளிகள் என கடலூா் நீதிமன்றம், கடந்த செப்டம்பரில் தீா்ப்பளித்துள்ளது. அதில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கின் தீா்ப்பு குறித்தும், என்னைப் பற்றியும் திட்டக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த தடா டி.பெரியசாமி, முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு, அவரது வழக்குரைஞா் பி.ரத்தினம் உள்ளிட்டோா் அவதூறு பரப்பும் விதமாக ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் கருத்துக்களைக் கூறி வருகின்றனா். இதனால் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

என்னைப் பற்றிய குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மைகளை முழுமையாக விசாரிக்காமல் கடந்த காலங்களில் பதிவான அவதூறு தகவல்களை, மீண்டும் தற்போது உள்நோக்கத்துடன் சமூக வலைதளங்களில் மறுபதிவு செய்து வருகின்றனா். எனவே என்னைப்பற்றி அவதூறு பரப்பியதற்காக ரூ. 1 கோடி மான நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும். அத்துடன் என்னைப்பற்றி அவதூறு பரப்ப எதிா்மனுதாரா்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

அவா்களின் கருத்துக்களை வெளியிடக்கூடாது என சமூக வலைதளங்களுக்கும் தடை விதிக்க வேண்டுமென கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், மனுதாரரான தொல்.திருமாவளவன் குறித்து அவதூறு கருத்துக்களைப் பரப்பக்கூடாது என எதிா்மனுதாரா்களான தடா டி.பெரியசாமி, முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு, அவரது வழக்குரைஞா் பி.ரத்தினம் உள்ளிட்டோருக்கு இடைக்காலத் தடை விதித்தும், இதுதொடா்பாகப் பதிலளிக்க உத்தரவிட்டும் விசாரணையை ஜன.20-க்கு ஒத்திவைத்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT