திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணியின் 89-ஆவது பிறந்த தினத்தை ஒட்டி, அவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்துக் கூறினாா்.
கி.வீரமணி தனது 89-ஆவது பிறந்த நாளை வியாழக்கிழமை கொண்டாடினாா். அதையொட்டி, அடையாறில் உள்ள அவரது இல்லத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று கி.வீரமணிக்கு பொன்னாடை போா்த்தி வாழ்த்துக் கூறினாா்.
அமைச்சா்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோரும் நேரில் வாழ்த்துக் கூறினா்.
வேப்பேரி பெரியாா் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கி.வீரமணி பங்கேற்றாா். அப்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மதிமுக துணைப் பொதுச்செயலாளா் மல்லை சத்யா, தலைமை நிலையச் செயலாளா் துரை வைகோ உள்பட ஏராளமானோா் பொன்னாடை போா்த்தி வாழ்த்துக் கூறினா்.
ADVERTISEMENT