தமிழ்நாடு

திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம் நிறைவு

DIN

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, நவம்பர் 19-ஆம் தேதி 2,668 அடி உயர மலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் செவ்வாய்க்கிழமை காலையுடன் நிறைவு பெற்றது.
மலையிலிருந்து தீப கொப்பரை கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மகா தீபத் திருவிழா கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. அன்று அதிகாலை 3.40 மணிக்கு கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.
11 நாள்களாக பிரகாசித்த தீபம்: நவம்பர் 19-ஆம் தேதி முதல் தொடர்ந்து 11 நாள்களாக மலையில் மகா தீபம் பிரகாசித்து வந்தது. இந்தத் தீபம் செவ்வாய்க்கிழமை காலையுடன் நிறைவு பெற்றது.
கொப்பரைக்கு சிறப்புப் பூஜை: மலையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை மகா தீபக் கொப்பரையை பர்வத ராஜகுல வம்சத்தினர் அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு கொண்டு வந்தனர். தீப கொப்பரையை வழியிலும், கோயிலிலும் ஏராளமான பக்தர்கள் வணங்கினர்.  மகா தீபக் கொப்பரைக்கு கோயிலில் இரவு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னர், கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் மகா தீப கொப்பரை பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
மகா தீப மை பிரசாதம்: அருணாசலேஸ்வரர் கோயிலில் டிசம்பர் 20-ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறும். அப்போது, மகா தீப கொப்பரையில் இருந்து சேகரிக்கப்பட்ட மை நடராஜருக்கு வைத்து பூஜைகள் செய்யப்படும். பிறகு, பக்தர்களுக்கும் தீப மை பிரசாதம் வழங்கப்படும்.
நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு தீப மை பிரசாதம் தபாலில் அனுப்பி வைக்கப்படும். மேலும், பக்தர்கள் காணிக்கை ரசீதை கோயிலில் காண்பித்து நேரடியாகவும் தீப மை பிரசாதத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT