தமிழ்நாடு

அதிமுக தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்

1st Dec 2021 11:18 AM

ADVERTISEMENT

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆா் மாளிகையில் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோா் தலைமையில் இன்று காலை முதல் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.

அதிமுகவின் அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் மறைந்த நிலையில் அவைத் தலைவர் இல்லாமல் முதல் முறையாக கூடியுள்ள அதிமுகவின் செயற்குழுவில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகியும் எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளருமான தமிழ்மகன் உசேன் அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக செயற்குழுவால் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கியது முதல் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருபவர் தமிழ்மகன் உசேன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : ADMK Tamilmagan Hussain
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT