தமிழ்நாடு

சேலத்தில் சுவர் சரிந்து விழுந்து வாலிபர் சாவு

1st Dec 2021 10:58 AM

ADVERTISEMENT

சேலத்தில் சுவர் சரிந்து விழுந்ததில் வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

சேலம் குகை ராமலிங்கசாமி தெரு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜேஷ்(20) நேற்று இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகிலுள்ள பழுதான பயன்படுத்தாத வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மழை பெய்து ஈரமாக இருந்த சுவர் அவர் மீது விழுந்தது. இதில் சுவரின் அடியில் சிக்கிக் கொண்ட வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதையும் படிக்க | நாட்டில் குறைந்து வரும் தொற்று பாதிப்பு: புதிதாக 8,954 பேருக்கு தொற்று: 267 பேர் பலி

ADVERTISEMENT

சுவர் இடிந்து விழுந்ததில் சிக்கிக்கொண்டு உயிரிழந்த கூலித்தொழிலாளி ராஜேஷ்.

இந்த நிலையில் இன்று புதன்கிழமை காலை அந்த வழியாக சென்ற சிலர் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் சிக்கிக் கொண்டார் என்பதை செவ்வாய்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். 

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செவ்வாய்பேட்டை போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில்  ராமலிங்கம் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் என்பது தெரியவந்தது. 

இதையும் படிக்க | பயணத் தடைகள் மூலம் ஒமைக்ரான் பரவலை தடுத்துவிட முடியாது: உலக சுகாதார அமைப்பு 

தொடர் மழையின் காரணமாக, சுவர் ஈரமாக இருந்ததால் அவர் மீது விழுந்திருக்கலாம் என தெரிய வருகிறது.

 

Tags : salem wall collapsed young man died
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT