தமிழ்நாடு

ஒருங்கிணைப்பாளர்களை அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்வர்: அதிமுக விதியில் மாற்றம்

1st Dec 2021 12:16 PM

ADVERTISEMENT


அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்யப்படுவர் என கட்சியின் விதியில் மாற்றம் செய்யப்பட்டு செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை காலை தொடங்கியது. இதில் 11 தீர்மானங்களும், சிறப்புத் தீர்மானம் ஒன்றும், இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன.

இதன்மூலம், கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்களுக்குப் பதில் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் மூலம் இணைந்தே தேர்வு செய்யப்படும் வகையில் கட்சியின் விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. செயற்குழுவில் இதற்கான சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

சிறப்புத் தீர்மானம் விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்
சிறப்புத் தீர்மானம் இணைப்பு விவரம்: இங்கே க்ளிக் செய்யவும் 

ADVERTISEMENT

Tags : ADMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT