தமிழ்நாடு

சேவூர் அருகே மண் ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு

1st Dec 2021 08:59 AM

ADVERTISEMENT


அவிநாசி: சேவூர் அருகே மண் ஏற்றி வந்த லாரி பழுதாகி போக்குவரத்து தடைபட்டதால், மக்கள் லாரியை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவிநாசி-நம்பியூர் சாலை, ஈரோடு மாவட்டம், இருகாலூர் குட்டையில் இருந்து மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி, திருப்பூர் மாவட்டம், சேவூர் அருகே சாவக்கட்டுப்பாளையம், கூட்டப்பள்ளியில் பழுதாகி சாலையில்  நின்றது. 

இதையும் படிக்க | முன்னாள் அமைச்சா் அன்வா் ராஜா நீக்கம்: இன்று அதிமுக செயற்குழு

நீண்ட நேரமாகியும் போக்குவரத்துக்கு இடையூறாக மண் லாரி நின்றதால் குறுக்கே நின்றதால், தகவலறிந்த தத்தனூர் ஊராட்சி மன்றத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை இரவு மண் லாரியை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ADVERTISEMENT

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறையினர், சேவூர் போலீஸார் பழுதாகி நின்றுக் கொண்டிருந்த லாரியை பழுதுநீக்கி, சேவூர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். 

இதையும் படிக்க | 5 ஆண்டுகளில் 6 லட்சம் போ் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனா்: மத்திய அரசு

மேலும் விசாரணையில் அந்த லாரியில், மண் எடுத்து வருவதற்கு உரிய அனுமதி பெற்று இருப்பதாக, வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். 

இதையடுத்து, இரவு, 10 மணிக்கு மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags : லாரி சிறைபிடிப்பு மண் லாரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT