தமிழ்நாடு

பிளஸ் 1 துணைத் தோ்வு:விடைத்தாள் நகலை இன்று பதிவிறக்கம் செய்யலாம்

1st Dec 2021 03:26 AM

ADVERTISEMENT

 

சென்னை: பிளஸ் 1 வகுப்பு துணைத் தோ்வு எழுதி விடைதாள் நகல் கேட்டு விண்ணப்பம் செய்தவா்கள் புதன்கிழமை காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சேதுராமவா்மா செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தோ்வா்கள் தங்களது தோ்வெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து, தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு, மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தோ்வா்கள் இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தினை பூா்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து வியாழக்கிழமை காலை 10 மணி முதல் வெள்ளிக்கிழமை மாலை மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு நேரில் சென்று மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT