தமிழ்நாடு

ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் ஜெயந்தி விழா

1st Dec 2021 03:45 AM

ADVERTISEMENT

 


திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில், பகவானின் 103-ஆவது ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது.
இதையொட்டி, அதிகாலை 5 மணி முதல் சுப்ரபாதம், ராம்ஜி அகவல், ஆரத்தி, முகநூல் நாம சங்கீர்த்தனம், அகண்ட நாம ஜெபம், காலை 7.30 மணிக்கு சிறப்பு ஹோமம், நித்ய பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முகநூல் நாம சங்கீர்த்தனம், நித்ய பூஜை, தாலாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, வெள்ளிக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்த பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரை பக்தர்கள் வணங்கினர்.
இன்றைய நிகழ்ச்சிகள்: ஜெயந்தி விழாவின் 2-ஆவது நாளான புதன்கிழமை (டிச.1) அதிகாலை 5 மணிக்கு சுப்ரபாதம், ராம்ஜி அகவல், ஆரத்தி, முகநூல் நாம சங்கீர்த்தனம், நித்ய பூஜை, அகண்ட நாம ஜெபம், காலை 7.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஏகாதச ருத்ர பாராயணம், மஹாபிஷேகம், அர்ச்சனை, ஆரத்தி, இரவு 7.30 மணிக்கு பகவான் பல்லக்கில் பவனி வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை ஆஸ்ரம அறங்காவலர்கள் மதர் மாதேவகி, மதர் விஜயலட்சுமி, மதர் ராஜேஸ்வரி, மருத்துவர் டி.எஸ்.ராமநாதன், ஜி.சுவாமிநாதன், பி.ஏ.ஜி.குமரன், டி.கணபதி சுப்பிரமணியன் மற்றும் தன்னார்வலர்கள், ஆஸ்ரம ஊழியர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT