தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு: நீர்மட்டம் 68.84 அடி

31st Aug 2021 08:31 AM

ADVERTISEMENT

 

செவ்வாய்க்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 14,512 கன அடியாக சரிவடைந்துள்ளது.

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68.05 அடியிலிருந்து 68.84 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 14709 கன அடியிலிருந்து 14,512 கன அடியாக குறைந்துள்ளது. 

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 650 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 31.71 டி.எம்.சி.யாக உள்ளது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT