தமிழ்நாடு

செப். 1-இல் கல்லூரிகள் திறப்பு: சுழற்சி முறையில் வகுப்புகள்

27th Aug 2021 02:21 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில், சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

கரோனா இரண்டாம் அலை காரணமாக ஏப்ரல் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில், கரோனா பரவல் குறைந்ததையடுத்து, வருகின்ற செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்தது.

இதையடுத்து உயர்கல்வித்துறை சார்பில் கல்லூரிகள் திறப்பதற்கான வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறையில்,

இளநிலை இரண்டாம் ஆண்டு, முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும் இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடைபெறும்.

ADVERTISEMENT

மேலும், பொறியியல் படிப்புகளிலும் ஒருநாள் விட்டு ஒருநாள் நேரடி வகுப்புகள் நடத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT