தமிழ்நாடு

இன்னும் 1 அல்லது 2 மணி நேரத்தில் இங்கெல்லாம் பலத்தமழை பெய்யும்

27th Aug 2021 05:32 PM

ADVERTISEMENT


சென்னை: தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னையின் பெரும்பாலான இடங்களில் இன்று மாலை பரவலாக பலத்த மழை பெய்துள்ளது.

இந்த நிலையில், இன்னும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை எச்சரிக்கை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் மாலை 5.10 மணிக்கு வெளியிட்டிருக்கும்  தகவலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இன்னும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT