தமிழ்நாடு

புதுவை சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கியது

27th Aug 2021 11:14 AM

ADVERTISEMENT

புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் நாள் கூட்டம் இன்று தொடங்கியது. 

புதுவை சட்டப்பேரவையில் இன்றைய முதல் நிகழ்வாக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மறைவு, துணை நிலை ஆளுநர் தமிழிசையின் தாயார் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

சென்னை புற்றுநோய் மரு‌த்துவமனை மரு‌த்துவ‌ர் சாந்தா, அரியாங்குப்பம் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயமூர்த்தி, மண்ணாப்பட்டு முன்னாள் உறுப்பினர் ராஜாராம், முத்தியால்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் அருள்ராஜ் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தொடர்ந்து சரக்கு மற்றும் சேவை வரி குறித்தான தீர்மானம், துணை நிலை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இதனை அடுத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை உரை மீதான விவாதம் தற்போது தொடங்கி நடைபெறுகிறது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT