தமிழ்நாடு

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு

22nd Aug 2021 04:46 PM

ADVERTISEMENT

திருத்தணி: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று திருத்தணியில் நடந்தது.

திருத்தணி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வுக்கான மாநில அளவில் தேர்தல் நடந்தது. தேர்தல் ஆணையாளராக சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் பாலசந்தர், துணை தேர்தல் ஆணையராக முன்னாள் மாநில துணைத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் பணியாற்றினர். 

இதில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான மாநில புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில தலைவராக திருநெல்வேலி மணிமேகலை, பொதுச் செயலாளராக தூத்துக்குடி மயில், மாநிலப் பொருளாளராக செங்கல்பட்டு மத்தேயூ, துணை பொதுச் செயலாளராக திண்டுக்கல் கணேசன், இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினராக திருப்பூர் ஜான்கிறிஸ்துராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதுதவிர மாநில துணைத் தலைவர்கள், மாநில செயலாளர்கள் என 18 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநிலத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருவள்ளூர் மாவட்ட கிளை தலைவர் சுவர்ணாபாய், செயலர் முருகன், பொருளாளர் பாலசுந்தரம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். இத்தேர்தலில் மாநிலம் முழுவதிலும் இருந்து, மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT