தமிழ்நாடு

மணிப்பூர் ஆளுநர் இல. கணேசன்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து

22nd Aug 2021 04:04 PM

ADVERTISEMENT

மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்ட பாஜக மூத்த தலைவர் இல. கணேசனுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து கூறியுள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், மணிப்பூர் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள தலைவர் கருணாநிதியின் அன்பைப் பெற்ற பண்பாளரும்; நீண்ட அரசியல் அனுபவத்துக்குச் சொந்தக்காரருமான இல.கணேசனுக்கு வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் சமூகவலைதளங்களில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின், இல. கணேசனை தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இதேபோல் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் போனில் தொடர்பு கொண்டு இல.கணேசனுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT