தமிழ்நாடு

திமுக தேர்தல் அறிக்கைப்படி, பேரவை நேரலை ஒளிபரப்பை நாளையே தொடங்க வேண்டும்: கமல்ஹாசன் 

DIN

திமுக தேர்தல் அறிக்கைப்படி, பேரவை நேரலை ஒளிபரப்பை நாளையே தொடங்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். 
தமிழகச் சட்டப்பேரவை கூட்டத்தொடா் ஆகஸ்ட் 13-இல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதோடு தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடா் செப்டம்பா் 21-ஆம் தேதிவரை நடைபெறுவதாக இருந்தது. 
இந்த நிலையில் பேரவைத் தலைவா் அப்பாவு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் பேரவையின் நிகழ்ச்சி நிரல்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 
அதன்படி செப்டம்பா் 21-ஆம் தேதியோடு நிறைவடைய இருந்த கூட்டத்தொடா் செப்டம்பா் 13-ஆம் தேதியோடு நிறைவடையும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் திமுக தேர்தல் அறிக்கைப்படி, பேரவை நேரலை ஒளிபரப்பை நாளையே தொடங்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், பட்ஜெட் மீதான முழு விவாதம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. 
மானியக்கோரிக்கை  விவாதம் துவங்கப்போகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, சட்டமன்ற நேரலை ஒளிபரப்பு நாளை முதலாவது தொடங்க தமிழக முதல்வர் ஆவன செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது பேரவைக் கூட்டத்தொடர் நிகழ்வுகளை தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT