தமிழ்நாடு

தேர்தல் வெற்றி: 4 மாவட்ட பாஜக தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசு!

22nd Aug 2021 04:42 PM

ADVERTISEMENT

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 4 தொகுதிகளில் பாஜக வென்றதை அடுத்து அந்த தொகுதி அடங்கிய மாவட்டச் செயலாளர்களுக்கு பாஜக சார்பில் இன்னோவா கார் பரிசு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில்  பாஜக எம்எல்ஏக்கள் வெற்றிபெற்றால் அந்த தொகுதி அடங்கிய மாவட்டச் செயலாளர்களுக்கு இன்னோவா கார் பரிசளிக்கப்படும் என பாஜக கூறியிருந்தது. 

அந்தவகையில் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் எம் ஆர். காந்தி நாகர்கோயிலிலும், வானதி சீனிவாசன் கோவை தெற்கிலும், நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியிலும், சரஸ்வதி மொடக்குறிச்சியிலும் வெற்றி பெற்றனர். 

இதையடுத்து பாஜக வெற்றி பெற்ற தொகுதிகளைச் சேர்ந்த ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோயில், கோவை ஆகிய மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டது. 

ADVERTISEMENT

ஞாயிற்றுக்கிழமை பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை மாவட்டச் செயலாளர் நந்தகுமார், நெல்லை மாவட்டச் செயலாளர் மகாராஜன், ஈரோடு மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் தர்மராஜன் ஆகியோருக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கார்களைப் பரிசாக வழங்கினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT