தமிழ்நாடு

மணிப்பூர் ஆளுநர் இல. கணேசன்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

22nd Aug 2021 02:07 PM

ADVERTISEMENT


மணிப்பூர் ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியின் டிவிட்டர் பதிவு:

"மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் அவர்களின் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்."

இதையும் படிக்கமணிப்பூர் ஆளுநராக இல. கணேசன் நியமனம்

ADVERTISEMENT

முன்னதாக, தஞ்சாவூரைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் இல. கணேசனை மணிப்பூர் மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆணை பிறப்பித்திருந்தார். இதைத் தொடர்ந்து, அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Tags : La Ganesan
ADVERTISEMENT
ADVERTISEMENT