தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மணல் மேடு சரிந்து வாலிபர் பலி 

22nd Aug 2021 01:36 PM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மணல் மேடு சரிந்து வாலிபர் ஒருவர் நேற்றிரவு பலியானார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சேவுகப்பெருமாள் (30). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவும் வீட்டில் அடுப்பு பூசுவதற்காக இருசக்கர வாகனத்தில் களத்தூர் அருகே உள்ள அர்ச்சனா நதி ஓடைக்கு மண் எடுக்க சென்றுள்ளனர்.

அப்போது மேலே உள்ள மண்மேடு சரிந்து வாலிபர் சேவுகப்பெருமாள் மற்றும் மாரிமுத்து இருவரும் அதில் சிக்கி உள்ளனர். 

இதில் சேவுகப்பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். மாரிமுத்து சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை காப்பாற்றினர். இருவரையும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அப்போது சேவுக பெருமாளை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதுதொடர்பாக சேவுகப்பெருமாள்  தந்தை சேவுகன் என்பவர் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT