தமிழ்நாடு

வரலட்சுமி நோன்பு: சங்ககிரி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள்

20th Aug 2021 12:21 PM

ADVERTISEMENT


சங்ககிரி: சங்ககிரி பழைய எடப்பாடி சாலை பகுதியில் உள்ள அருள்மிகு ஓங்காளியம்மன், பேச்சியம்மன் கோயில், வி.என்.பாளையம் சக்தி மாரியம்மன், சந்தைப்பேட்டை அருள்மிகு செல்லியம்மன் கோயில்களில் வரலட்சுமி நோன்பினையொட்டி அம்மன் சுவாமிகளுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

 

சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ளஅருள்மிகு சக்திமாரியம்மனுக்கு வெள்ளிக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

ADVERTISEMENT

வரலட்சுமி நோன்பினையொட்டி, அருள்மிகு  ஓங்காளியம்மன், பேச்சியம்மன் சுவாமிகளுக்கு பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மஞ்சள் கயிறு, குங்குமம், வளையல்கள் வைத்து பெண்கள் சுவாமிகளை வழிப்பட்டனர்.  

இதேபோல் வி.என்.பாளையம் அருள்மிகு சக்தி மாரியம்மன், சந்தைபேட்டை அருள்மிகு செல்லியம்மன் சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT