தமிழ்நாடு

தேவாரத்தில் மக்னா யானை மர்ம சாவு: வனத்துறை விசாரணை

20th Aug 2021 12:51 PM

ADVERTISEMENT



போடி: தேவாரத்தில் வெள்ளிக்கிழமை மக்னா யானை மர்மாக இறந்து கிடந்தது குறித்து வனத்துறை மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவாரம் பகுதியில் கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக மக்னா என்றழைக்கப்படும் ஒற்றை காட்டு யானை சுற்றித் திரிந்து வந்தது. இதுவரை 10-க்கும் மேற்பட்டவர்களை இந்த யானை கொன்றுள்ளது. 

கடந்த இரண்டு மாத காலமாக இப்பகுதியில் மக்னா யானையின் நடமாட்டம் இல்லாமல் இருந்தது.

இதனிடையே தேவாரம் பிள்ளையார் ஊத்து என்ற இடத்தின் அருகே சின்னச்சாமி மகன் பாண்டி (55) என்பவரது பட்டா நிலத்தில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வந்த தகவலையடுத்து கோம்பை வனத்துறையினர் மற்றும் தேவாரம் காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அங்கு 40 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது.

ADVERTISEMENT

இந்த யானை மக்னா யானை தானா அல்லது வேறு யானையா, யானை உடல்நிலை சரியில்லாமல் இறந்து போனதா அல்லது வேறு யாரும் விஷம் வைத்து கொன்றனரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். தனியார் தோட்டத்தில் யானை இறந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT