தமிழ்நாடு

சங்ககிரியில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா

20th Aug 2021 12:35 PM

ADVERTISEMENT


 
சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா சங்ககிரி அருகே உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாளையொட்டி சங்ககிரி புதிய பேருந்துநிலையம் அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.நடராஜன் தலைமையில் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

தொழிலாளர் நல அமைப்பின் மாவட்டச் செயலர் கருப்பன்ஆசாரி, எஸ்சி.,எஸ்டி., வட்டாரத் தலைவர் பரமன், நகர விவசாய அணி நிர்வாகி  சரவணன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT