தமிழ்நாடு

தமிழகத்தில் 4 நாள்களுக்கு கனமழை: எங்கெல்லாம் வாய்ப்பு?

20th Aug 2021 01:14 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், தென் தமிழகம், உள்மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை(ஆக. 21) கடலூர், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, சேலம் மாவட்டங்களில் கனமழையும், பிற மாவட்டங்கள், காரைக்கால், புதுவையில் அனேக இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

ADVERTISEMENT

ஆக. 22இல் சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அதேபோல், ஆக. 23இல் சேலம், தர்மபுரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

ஆக 20 முதல் 24 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT