தமிழ்நாடு

நண்பரின் திருமணத்திற்கு சென்றவர்கள் கார் மரத்தில் மோதி ஒருவர் பலி; 4 பேர் காயம்

20th Aug 2021 11:19 AM

ADVERTISEMENT


புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் வெள்ளிக்கிழமை அதிகாலை கார் மரத்தில் மோதிய விபத்தில் நண்பரின் திருமணத்திற்கு சென்ற ஒருவர் உயிரிழந்தார், நான்கு பேர் காயமடைந்தனர்.

சென்னை திருவள்ளூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த திருட்சினசன்சிங் மகன் சஞ்சீத்சிங்(51), ருத்திரகோபு மகன் உதயசங்கர்(54), துரை மகன் பரந்தாமன்(41), ராமலிங்கம் மகன் ரத்தினகுமார்(25) , மணி மகன் முருகேசன் (48) இவர்கள் ஐந்து பேரும் இதே நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நண்பரின் திருமணத்திற்காக, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு காரில் வந்த போது செங்கிப்பட்டி, கந்தர்வகோட்டை சாலையில் வடுகப்பட்டி கிராமம் அருகே எதிர்பாராத விதமாக சாலை ஓரத்திலிருந்த புளிய மரத்தில் கார் மோதியதில் சஞ்சீத்சிங் (51) சம்பவயிடத்திலேயே பரிதாபமாக இறந்தார், மற்ற நான்கு பேரும் காயமடைந்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் செந்தில்மாறன் மற்றும் போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT