தமிழ்நாடு

5 மாவட்டங்களில் தொழில் கற்கும் மையங்கள்

14th Aug 2021 11:48 AM

ADVERTISEMENT


தமிழகத்தில் திருச்சி உள்பட 5 மாவட்டங்களில் அந்தந்த மாவட்டங்களின் சிறப்பு விளைபொருள்களுக்கு ஏற்ப தொழில் கற்கும் மையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

வேளாண் பட்ஜெட்டில் அவர் வெளியிட்ட அறிவிப்பில், 
தமிழகத்தில் திருச்சி உள்பட 5 மாவட்டங்களில் அந்தந்த மாவட்டங்களின் சிறப்பு விளைபொருள்களுக்கு ஏற்ப தொழில் கற்கும் மையங்கள் அமைக்கப்படும்.

கோவையில் தேங்காய், திருச்சியில் வாழை, ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள், விருதுநகரில் சிறுதானிய தொழில்கற்கும் மையங்கள் உருவாக்கப்படும்.

மேலும் பார்க்க.. வேளாண்மை நிதிநிலை அறிக்கையின் முழு விவரம்

ADVERTISEMENT

அதுபோல, நாகையில் மீன் பதப்படுத்தும் தொழில் கற்கும் மையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, பொன்னி அரிசிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT