தமிழ்நாடு

மானாமதுரை பிரத்யங்கிரா தேவி கோயிலில் திருமணத் தடைகள் நீங்க சுயம்வரா பார்வதி ஹோமம்

14th Aug 2021 03:49 PM

ADVERTISEMENT

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வேதியரேந்தல் விலக்குப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் நடைபெற்று வரும் அதிருத்ர மகா சகஸ்ர சண்டீ யாகத்தில் திருமணத் தடைகள் நீங்க ஸ்ரீ சுயம்வரா பார்வதி ஹோமம் நடத்தப்பட்டது.

அன்னதானத்திற்கு பெயர்போன மானாமதுரை பிரத்தியங்கிரா தேவி கோயிலில் 19 ஆவது ஆண்டாக அதிருத்ர மகா சகஸ்ர சண்டீ யாகம் கடந்த 7ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 

கோயில் யாகசாலையில் உள்ள ஏராளமான யாக குண்டங்களில் தஞ்சை குருஜி கணபதி சுப்பிரமணியம் சாஸ்திரிகள் தலைமையில் ஏராளமான வேத விற்பன்னர்கள் கூடி இந்த யாகத்தை நடத்துகின்றனர். யாகத்தின் முக்கிய ஹோமமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத் தடைகள் நீங்கி திருமணம் நடைபெற வேண்டி ஸ்ரீ சுயம்வரா பார்வதி ஹோமம் நடத்தப்பட்டது. 

யாகத்தின் போது யாகசாலையில் உள்ள பிரத்யங்கிரா தேவி உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக அனைவருக்கும் 26 வகையான செல்வங்கள் கிடைக்க வேண்டி ஸ்ரீ சாம்ராஜ்ய லெட்சுமி ஹோமம் நடத்தப்பட்டது. யாகத்திற்கான ஏற்பாடுகளை பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் நிர்வாகி ஞானசேகரன் சுவாமிகள் செய்துள்ளார். வரும் 16 ஆம் தேதி வரை பிரத்யங்கிரா தேவி கோயிலில் அதிருத்ர சகஸ்ர சண்டீ யாகம் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT