தமிழ்நாடு

இளையான்குடியில் ரத்ததான முகாம்

14th Aug 2021 03:12 PM

ADVERTISEMENT

 

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற ரத்ததான முகாமில் காவல்துறை சார்பு ஆய்வாளர் பாலமுருகன் உள்பட ஏராளமானோர் பங்கேற்று ரத்ததானம் செய்தனர். 

இளையான்குடியைச் சேர்ந்த எஸ்.டி.பி.ஐ கட்சி, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ரத்த வங்கி நிர்வாகம் இணைந்து இந்த முகாமை இளையான்குடி அரசு மருத்துவமனையில் நடத்தின.

முகாம் தொடக்க நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்தவர்கள் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

இளையான்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாலமுருகன், அரசு மருத்துவர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். முகாமில் பங்கேற்று ரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT