தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,964 பேருக்கு கரோனா; இன்று அதிகரிப்பு

11th Aug 2021 07:17 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,964 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 28 பேர் உயிரிழந்தனர்.

நேற்று 1,893 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 1,964 -ஆக அதிகரித்துள்ளது.

படிக்க |  கரோனாவில் சென்னை மீண்டும் முதலிடம்: கோவையை முந்தியது

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை புதன் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிதாக 1,964 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 25,81,094-ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 28 பேர் பலியாகியுள்ளனர். இது வரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,395-ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

படிக்கஆந்திரத்தில் புதிதாக 1,869 பேருக்கு கரோனா தொற்று

கரோனாவிலிருந்து 1,917 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25,26,317-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 20,382 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவையில் அதிக அளவு கரோனா பதிவாகி வந்த நிலையில், இன்று மீண்டும் சென்னையில் அதிக அளவு கரோனா பதிவாகியுள்ளது.

சென்னையில் புதிதாக 243 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் புதிதாக உயிரிழந்த நிலையில், 2,048 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மாவட்ட வாரியாக அதிகபட்ச பாதிப்பு:

சென்னை - 243  

கோவை - 229

ஈரோடு - 167

செங்கல்பட்டு - 140

ADVERTISEMENT
ADVERTISEMENT