தமிழ்நாடு

பொறியியல் மாணாக்கர்களுக்கு..சென்னை அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் நடத்தும் 'தொழில்நுட்ப விவாதம்'

8th Aug 2021 12:26 PM

ADVERTISEMENT

பொறியியல் படிக்கும் மாணாக்கர்களுக்காக அம்ரிதா விஷ்வ வித்யாபீடம், சென்னை வளாகத்தில் வருகிற ஆகஸ்ட் 9 முதல் 13 ஆம் தேதி வரை தொழில்நுட்ப விவாதம் நடைபெற உள்ளது. 

5ஜி, ஐஓடி(IoT), தொழில் 4.0, சைபர் பாதுகாப்பு, முக அடையாளம் கண்டறிதல் மற்றும் அதன் பயன்பாடுகள் போன்ற எதிர்காலத்தில் வரவிருக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து அந்தந்த துறைகளில் திறன்வாய்ந்த பேராசிரியர்களைக் கொண்டு நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியானது பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. 

இது அறிவியல், தொழில்நுட்பம், கணிதம் மற்றும் கலை பாடங்கள் ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமையும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த ஆன்லைன் காணொலி நிகழ்வில் கலந்துகொள்ள https://www.amrita.edu/event/amrita-foundation-program-engineering-aspirants-view-world-engineer-s-eye என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்யலாம். 

ADVERTISEMENT

அம்ரிதா விஷ்வ வித்யாபீடம், தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் 'ஏ' சான்றிதழைப் பெற்ற நிறுவனம் மற்றும் இந்தியாவின் மிகச்சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தமிழகத்தின் எட்டிமடையை தலைமையிடமாகக் கொண்ட அம்ரிதா பல்கலைக்கழகம் தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 6 வளாகங்களைக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படுகிறது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. அம்ரிதா பல்கலைக்கழகத்தில் சேர்க்கை தொடர்பான கூடுதல் தகவலுக்கு amrita.edu/btech என்ற இணையதள முகவரியில் அணுகவும். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT