தமிழகத்தில் புதிதாக 1,956 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் அடங்கிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது. புதிதாக1,956 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,807 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 28 பேர் பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | இனி வாட்ஸ் அப்பில் கரோனா தடுப்பூசி சான்றிதழ்
தமிழகத்தில் இன்று மட்டும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் 1,60,229.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 25,75,308 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 25,20,584 பேர் குணமடைந்துவிட்டனர். 34,317 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 20,407 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ள மாவட்டங்கள்:
கோவை - 241
சென்னை - 187
ஈரோடு - 185
செங்கல்பட்டு - 105
தஞ்சாவூர் - 97