தமிழ்நாடு

கருணாநிதி நினைவு நாள்: திருச்சியில் மரியாதை

7th Aug 2021 11:50 AM

ADVERTISEMENT

 

திருச்சி: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் பல்வேறு இடங்களில் கருணாநிதியின் உருவப்படத்துக்கு திமுக-வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் திரு உருவ சிலைக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 

இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் அன்பழகன், வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன்,  ஸ்டாலின் குமார், பழனியாண்டி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் அமைந்துள்ள முழு உருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கோவிந்தராஜன், வண்ணை அரங்கநாதன், செந்தில், மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் மதிவாணன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல, மாநகரின் பல்வேறு இடங்களிலும், வார்டுகளிலும் ஆங்காங்கே கருணாநிதியின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT