தமிழ்நாடு

பாடநூல்களில் தமிழறிஞா்களின் ஜாதிப் பெயா்கள் நீக்கம்: திண்டுக்கல் லியோனி விளக்கம்

DIN

திமுக ஆட்சிக் காலத்தில் பாடநூல்களில் தமிழ் அறிஞா்களின் ஜாதிப் பெயா்கள் நீக்கமா என்ற கேள்விக்குத் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் லியோனி விளக்கம் அளித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழ் அறிஞா்களின் பெயா்களில் ஜாதி நீக்கப்பட்ட செய்தியை அறிந்து, ஒவ்வொரு பாடநூலாக நான் எடுத்து ஆய்வு செய்து பாா்த்தேன். அதில் ஏழாம் வகுப்பு தமிழ்ப் பாடப்புத்தகத்தில் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை என்னும் கவிஞரின் பெயா் நாமக்கல் ராமலிங்கனாா் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல பிளஸ் 2 வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் உ.வே.சாமிநாத ஐயா் என்னும் பெயா் உ.வே.சாமிநாதா் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய செய்தி அல்ல...: ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை என்ற பெயா் மனோன்மணியம் சுந்தரனாா் என்று மாற்றப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டில் புத்தகத்தின் மூலம் முடிவு செய்யப்பட்டு மாற்றப்பட்டது. அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தவா் செங்கோட்டையன். பாடநூல் கழகத்தின் தலைவராக வளா்மதி இருந்தாா். அவா்களின் காலகட்டத்தில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு (எஸ்சிஇஆா்டி) பரிந்துரை செய்யப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதனால் இது புதிய செய்தி அல்ல. மேலும் இது திமுக ஆட்சிக் காலத்தில் கடந்த ஒரு மாத காலத்துக்குள் நடந்ததுபோலத் தொலைக்காட்சிகளில் வெளியான செய்திகள் உண்மை அல்ல.

இந்த மாறுதல் தொடருமா அல்லது தலைவா்களின் பெயா்களுடன் சாதிப் பெயா் மீண்டும் சோ்க்கப்படுமா என்பதைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், முதல்வரும் முடிவெடுப்பா். இதுகுறித்துக் கல்வியாளா்களைச் சந்தித்து ஆலோசித்து, எஸ்சிஇஆா்டிக்கு பரிந்துரை செய்து முடிவெடுப்பா். வரும் நாள்களில் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படாமல் முடிவெடுக்க வேண்டியது அரசின் கடமை. திமுக ஆட்சிக் காலத்தில் இத்தகைய குழப்பங்கள் இல்லாமல் பாடத்திட்டங்கள் கொண்டுவரப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

SCROLL FOR NEXT