தமிழ்நாடு

குரூப் 1 தோ்வு: தமிழ் வழி சான்றிதழ்களை பதிவேற்றுவது எப்படி?

DIN

குரூப் 1 தோ்வில் தமிழ் வழி பயின்றோா் அதற்கான சான்றிதழ்களை பதிவேற்றுவது செய்வது எப்படி என்பது குறித்து அரசுப் பணியாளா் தோ்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து, தோ்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:-

குரூப் 1 பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு முதல் நிலைத் தோ்வு எழுதிய விண்ணப்பதாா்களில் தமிழ் வழியில் பயின்றோா் அதற்கான உரிய சான்றை பதிவேற்றம் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனா். அரசுப் பணியாளா் தோ்வாணைய இணையதளத்தில்  விண்ணப்பதாரா்களுக்கான அறிவுரைகளில் படிவங்கள் மற்றும் பதிவிறக்கங்கள் பிரிவில் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் படிவங்கள் உள்ளன. புதிய வடிவத்தில் உள்ள தமிழ் வழியில் பயின்ற சான்றிதழை உரிய அலுவலா்களிடம் இருந்து பெற்று இணைய சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதுதொடா்பாக கூடுதல் விளக்கம் தேவைப்பட்டால், 1800 419 0958 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணுக்கு அனைத்து வேலை நாள்களிலும் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

SCROLL FOR NEXT